×

ஓசூரில் பாஜ நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

ஓசூர், ஜூன் 2: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்பியுமான நரசிம்மன் கலந்து கொண்டு மத்திய பாஜ ஆட்சியில், ஓராண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், குறிக்கோள்கள் மற்றும் மாநில தலைமையின் திட்டங்கள், குறித்து ஆலோசனை வழங்கினார். நிர்வாகிகள் முருகன், மனோகர், ராமலிங்கம், அன்பரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கிஷோர், பொருளாளர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மல்லேஷ் ரெட்டி மற்றும் மாவட்ட அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Tags : BJP ,Hosur ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...