×

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட முதன்மை நீரேற்று நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஆய்வு

ஈரோடு: ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட முதன்மை நீரேற்று நிலையத்தில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க, பவானி ஊராட்சிக்கோட்டை அடுத்த வரதநல்லூரில் ஓடும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.484.45 கோடி மதிப்பீட்டில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் செயல்படுத்தப்பட்டது.
வரதநல்லூரில் 100 அடி ஆழமுள்ள கிணறும், 52 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடா்ந்து சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளவும், வஉசி பூங்காவில் 114 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் வீடுகளுக்கு மேல் இணைப்பு கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், மாநகரில் சமீப நாட்களாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது.  இதனால், குடிநீர் வாகனங்கள் மூலம் மாநகராட்சி சார்பில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட முதன்மை நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யும் முறை, தண்ணீரை தேக்கி சுத்திகரிப்பு செய்யும் முறைகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, மாநகரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். மின்வாரியத்தின் ஒத்துழைப்புடன், பாதாள மின் கேபிள் திட்டப்பணிகள் முடிந்த பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஊராட்சிக்கோட்டை இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கும் விரைந்து இணைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிச்சாமி, உதவி ஆணையர் விஜயகுமார், கவுன்சிலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Tags : Ooratchikottai Drinking Water Project Primary Pumping Station ,
× RELATED லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது