×

கட்சியின் நிர்வாக வசதிக்காக, கட்சி பணிகள் செவ்வனே நடைபெறும் வகையில் திருவள்ளூர் மத்திய, கிழக்கு மாவட்ட திமுக ஒன்றியங்கள் பிரிப்பு: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்சியின் நிர்வாக வசதிக்காக, கட்சி பணிகள் செவ்வனே நடைபெறும் வகையில் திருவள்ளூர் மத்திய, கிழக்கு மாவட்ட திமுக ஒன்றியங்கள் பிரித்து பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.திமுக ெபாது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:திமுக நிர்வாக வசதிக்காகவும்-கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு ஆகிய 2 ஒன்றியங்கள், திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு ஆகிய 3 ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட திருவள்ளூர் வடக்கு,திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு ஆகிய ஒன்றியங்கள் பின்வரும் ஊராட்சிகள் கொண்டதாக அமையும்.

திருவள்ளூர் வடக்கு ஒன்றியம்: ஊராட்சிகள்- வெள்ளியூர், விளாப்பாக்கம், அரும்பாக்கம், மேலானூர், ஒதிக்காடு, புன்னபாக்கம், விஷ்ணுவாக்கம், கீழானூர், ஈக்காடுகண்டிகை, கரிக்கலவாக்கம், ஈக்காடு, தலக்காஞ்சேரி, புல்லரம்பாக்கம் ஆகிய 13 ஊராட்சிகள். திருவள்ளூர் மேற்கு ஒன்றியம்: ஊராட்சிகள்- காக்களூர், புட்லூர், தண்ணீர்குளம், வீரராகவபுரம், கல்யாணகுப்பம், கிளாம்பாக்கம், ஆயலூர், கோயம்பாக்கம், சிவன்வாயல், 10.மேலக்கொண்டையார், வதட்டூர், பேரத்தூர், சேலை ஆகிய 13 ஊராட்சிகள்.
திருவள்ளூர் கிழக்கு ஒன்றியம்: ஊராட்சிகள்- தொழுவூர், திருவூர் அரண்வாயல், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, அயத்தூர், தொட்டிக்கலை, நத்தமேடு, பாக்கம், புலியூர் ஆகிய 12 ஊராட்சிகள்.திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி கிழக்கு, கும்மிடிப்பூண்டி மேற்கு, மீஞ்சூர் வடக்கு, மீஞ்சூர் தெற்கு ஆகிய 4 ஒன்றியங்கள், கும்மிடிப்பூண்டி கிழக்கு, கும்மிடிப்பூண்டி மேற்கு, கும்மிடிப்பூண்டி தெற்கு-மீஞ்சூர் வடக்கு, மீஞ்சூர் தெற்கு, மீஞ்சூர் கிழக்கு ஆகிய 6 ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப் படுகிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி கிழக்கு, கும்மிடிப்பூண்டி மேற்கு, கும்மிடிப்பூண்டி தெற்கு- மீஞ்சூர் வடக்கு, மீஞ்சூர் தெற்கு, மீஞ்சூர் கிழக்கு ஆகிய ஒன்றியங்கள் பின்வரும் ஊராட்சிகள் கொண்டதாக அமையும்.

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம்: ஊராட்சிகள்- ஓபசமுத்திரம், சுண்ணாம்புகுளம், எளாவூர், மெதிபாளையம், நரசிங்கபுரம், நத்தம்,மேலக்கழனி, மங்காவரம், பெத்திக்குப்பம், தேர்வழி, ஆத்துப்பாக்கம், வழுதிலம்பேடு, ரெட்டம்பேடு, சித்திராஜகண்டிகை, பாத்தபாளையம், புதுகும்மிடிப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, தண்டலச்சேரி, பெரியஓபுளாபுரம் ஆகிய 19 ஊராட்சிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூர்.கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம்: ஊராட்சிகள் - ஆரம்பாக்கம், தோக்கமூர், எகுமதுரை, பூவலை, கண்ணம்பாக்கம், ஏடுர், சாணாபுத்தூர், ஈகுவார்பாளையம், சூரப்புண்டி, பல்லவாடா, மாநெல்லூர், பாதிரிவேடு, மாதர்பாக்கம், போந்தவாக்கம், செதில்பாக்கம், நேமளூர், பூதூர், கண்ணன் கோட்டை, கரடிபுத்தூர், தேர்வாய் ஆகிய 20 ஊராட்சிகள்.கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்: ஊராட்சிகள்- அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம்,குருவாட்டுச்சேரி, பன்பாக்கம், கீடிமுதலம்பேடு, பெருவாயல், புதுவாயல், மேல்முதலம்பேடு, கெட்டனமல்லி, குருவராஜகண்டிகை, பூவலம்பேடு, பெரிய புலியூர், சிறுவாடா, கொள்ளானூர், ஏ.என்.குப்பம், பாலவாக்கம், மங்களம், புதுப்பாளையம், காரணி, எருக்குவாய், நெல்வாய், முக்கரம்பாக்கம் ஆகிய 22 ஊராட்சிகள்.

மீஞ்சூர் வடக்கு ஒன்றியம்: ஊராட்சிகள்-பூங்குளம், கள்ளூர், சேகண்யம், சேலியம்பேடு, அகரம், பெரியகரும்பூர், பனப்பாக்கம், கோளூர், ஆவூர், சிரளப்பாக்கம், திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், கடப்பாக்கம், மெதூர், அவுரிவாக்கம், தாங்கல் பெரும்புலம், அகோட்டைகுப்பம், லைட்அவுஸ் குப்பம், பழவேற்காடு ஆகிய 20 ஊராட்சிகள்.மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்: ஊராட்சிகள்- கொடூர், ம்மவார்பாளையம், ஏ.ரெட்டிபாளையம், பெரும்பேடு,ஏறுசிவன், தத்தைமஞ்சி, காட்டூர், திருவெள்ளவாயல், மெரட்டூர், வேலூர், தேவதானம், காணியம்பாக்கம், அனுப்பம்பட்டு, கிளிக்கோடி, சோம்பட்டு, அரசூர்,காட்டாவூர், ஆலாடு, ஏலியம்பேடு, கூடுவாஞ்சேரி ஆகிய 20 ஊராட்சிகள்மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம்: ஊராட்சிகள்- கொண்டக்கரை, சுப்பாரெட்டிபாளையம், வெள்ளிவாயல்சாவடி, வல்லூர், அத்திப்பட்டு, மேலூர், நந்தியம்பாக்கம், நெய்தவாயல், வாயலூர்,காட்டுப்பள்ளி, நாலூர், வன்னியம்பாக்கம், சிறுவாக்கம், கல்பாக்கம், தடம் பெரும்பாக்கம் ஆகிய 15 ஊராட்சிகள் மற்றும் மீஞ்சூர் பேரூர் அடங்கும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK Unions ,Tiruvallur Central and Eastern Districts ,General Secretary ,Duraimurugan ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்