×

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா மனைவியின் முதலாமாண்டு நினைவஞ்சலி

பெரம்பலூர், மே 30:  பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் நேற்று திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி யின் பெற்றோர்களான ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை ஆகியோரது மணிமண்டபத்தை, தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்து, ஆ.இராசா மனைவி பரமேஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது சமாதியில், இராசா முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தினர். இதில் நீலகிரி திமுக மாவட்ட செயலாளர் முபாரக், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், திமுக சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், இராசா மகள் மயூரி, சகோதரர்கள் ராமச்சந்திரன், கலியபெருமாள், சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்றத்தலைவர் அம்பிகை சிவசண்முகம், ஆசிரியர் பச்சமுத்து, விஜயாம்பாள் பச்சமுத்து, ரெங்கராஜ், கமலா ரெங்கராஜ், அரசு வழக்கறிஞர் சந்தானலெட்சுமி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி., மணி, எம்பி அப்துல்லா, எம்எல்ஏக்கள் (பெரம்பலூர்) பிரபாகரன், (அரியலூர்) சின்னப்பா, (ஜெயங்கொண்டம்) கா.சொ.க.கண்ணன், திமுக மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிதைப்பித்தன், முன்னால் எம்எல்ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார், பொறியாளர் பரமேஸ்குமார், தமிழக சிறப்பு டெல்லி வழக்கறிஞர் குமணன், சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் கென்னடி, சென்னை மேற்கு மாவட்ட பிரதிநிதி ராஜகாந்தம், நீலகிரி மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி, காங்.கட்சியின் தெலங்கானா மாநில நிர்வாகி ஜான்அசோக் வரதராஜன், பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் குமரிமன்னன், கவுன்சிலர் துரை காமராஜ் மற்றும் மேட்டுப்பாளையம், கூடலூர், அன்னூர் மற்றும் பெரம்பலூர், திருப்பூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Deputy General Secretary ,A.Rasa ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் என்பது ஜனநாயகத்தை...