×

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி, மே 27: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை, தர்ணா போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. மாவட்ட தலைவர் மாது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேரலாதன், சக்ரவர்த்தி, கோபி, தேன்மொழி, லோகநாயகி குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் துரை, நிர்வாகிகள் விஜயகுமார், குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    

Tags : Dharna ,
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...