×

ஆதனக்கோட்டையில்

கந்தர்வகோட்டை, மே 25: புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாரத பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் தொகையை ஒவ்வொரு கட்டமாக வழங்கும் நிலையில் பயனாளிகள் சரிவர பயன்படுத்தாத நிலை உள்ளதால் அதைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆதனக்கோட்டை அரசு அலுவலகத்தில் ஆணையர் குமாரவேல் தலைமையிலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசரெத்னா விழிபுணர்வு உரை ஆற்றினர். இதில் கடந்த 2016 -17ம் ஆண்டு சோத்துப்பாளையை சேர்ந்த பாஸ்கர் என்ற பயனாளி இறந்த நிலையில் அவரது மனைவி ஜெயந்தி மாலா வாரிசு அடிப்படையில் வீட்டை கட்டி முடித்து உள்ள நிலையில் அதற்கான அரசு தொகை இதுநாள்வரை ஜெயந்திமாலா கணக்கில் பணம் வராத நிலை உள்ளதால் அவர் எனது ஏழ்மை நிலையில் கணவரை இழந்து உள்ள தனக்கு உடனடியாக இத்திட்டத்திற்கான தொகையை வழங்க வேண்டும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசரெத்னாவிடம் பணிவுடன் கேட்டுக் கொண்டார். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேச ரெத்னா உறுதி கூறினார்.

Tags : Adanakottai ,
× RELATED ஆதனக்கோட்டை பகுதியில் கொத்து கொத்தாக காய்க்க துவங்கிய மாங்காய்