×

கீர்த்திலால்ஸ் ஷோரூமில் மணப்பெண்ணுக்கான பிரத்யேக ஸ்டுடியோ

கோவை, ஏப்.21: கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள கீர்த்திலால்ஸ் ஷோரூமில் பிரத்யேக `பிரைடல் ஸ்டுடியோ’ துவங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டுடியோ மணப்பெண் நிச்சயதார்த்தம் முதல் வரவேற்பு வரை ஒவ்வொன்றுக்கும் நகைகளை வழங்குகிறது. இங்கு தற்கால மற்றும் பாரம்பரிய மணப்பெண் நகைகளின் வசீகரிக்கும் மற்றும் அரிய சேகரிப்புகள், கண்கவரும் வைரங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நுண்ணிய வேலைப்பாடுகளில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த டெக்னோ பிரைடல் ஸ்டுடியோ சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய திருமண வடிவமைப்புகளின் சிறந்த கலவையாகும். விர்ச்சுவல் ட்ரை மூலம் கடையில் உள்ள தயாரிப்புகளை தவிர, வேறு வித டிசைன்களையும் அணிந்து பார்த்து தேர்ந்தெடுக்க முடியும். தனிப்பயனாக்க டேப்லட் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப புதிய டிசைன்களை உருவாக்க வடிவமைப்பாளருக்கு உதவுகிறது.

இவை அனைத்தும் 10 நிமிடங்களில் செய்ய முடியும். மேலும், இந்த ஸ்டுடியோ விர்ச்சுவல் ஸ்டோர் விருப்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள், உலகில் உள்ள எண்ணற்ற கீர்த்திலால்ஸ் டிசைன்களை கண்டு, அணிந்து ரசிக்க முடியும்.

Tags : Kirtilals Showroom ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி