×

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் டூவீலர் மெக்கானிக்குகளுக்கு நலவாரிய அட்டை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்


சேலம், ஏப். 19: சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், முதன்முறையாக 52 டூவீலர் மெக்கானிக்குகளுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டைகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 453 மனுக்கள் பெறப்பட்டது. இதில், தகுதியான மனுக்களின் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ₹9,300 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ₹12,500 மதிப்பிலான கைப்பேசிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ₹8,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களும், ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் விபத்தில் இறந்ததையொட்டி, அவரது தந்தை ஏழுமலைக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹ஒரு லட்சத்திற்கான காசோலை உள்பட நேற்று ₹4.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், முதன்முறையாக டூவீலர் மெக்கானிக்குகள் 52 பேருக்கு, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். அப்போது, கலால் உதவி ஆணையர் தனலிங்கம், தனித் துணை கலெக்டர் கோவிந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Collector ,Karmegam ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...