×

ராமநவமி உற்சவம் நாளை துவக்கம்

நாமக்கல், ஏப்.9: நாமக்கல்லில் நாளை ராமநவமி உற்சவம் துவங்குகிறது. நாமக்கல் ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபா சார்பில், ஆண்டுதோறும் ராமநவமி உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 108ம் ஆண்டு ராமநவமி உற்சவ விழா, நாளை (10ம் தேதி) கோட்டை மெயின் ரோட்டில் உள்ள கார்னேஷன் சத்திரத்தில் துவங்குகிறது. இந்த விழா வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 9 நாட்களும் அர்ச்சனை, தீபாராதனை மற்றும் திவ்ய நாம பஜனை சங்கீர்த்தனம் முதலிய வைபவங்களுடன் நடைபெற உள்ளது. தினமும் மாலை 7 மணிக்கு விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம், தொடர்ந்து பூஜை, திவ்ய நாம பஜனை மற்றும் தீபாராதனை நடக்கிறது. வரும் 18ம் தேதி காலை 10 மணியளவில் திருக்கல்யாண உற்சவம், இரவு வசந்த கேளிக்கை ஆகியவற்றை, கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சார்யார் மற்றும் வெங்கடசேஷன் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். 19ம் தேதி இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.

Tags : Ramanavami festival ,
× RELATED கும்பகோணம் ராமசுவாமி கோயிலில்...