×

மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்

திருப்புத்தூர், ஏப். 9: திருப்புத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டை பகுதி வடவன்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடந்தது. இதையொட்டி அங்குள்ள முனிநாதர் கோயில் பகுதி பொட்டலில் பல்வேறு ஊர்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் மாடுகளை பிடித்தனர். இதில் மாடுகள் முட்டியதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் வடவன்பட்டி சேர்ந்த கலைச்செல்வம் (40), சிங்கம்புணரியை சேர்ந்த கணேசன் (40), சுண்டக்காட்டைச் சேர்ந்த கருப்பையா (24) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Manchurian ,
× RELATED விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்