ஆனந்தூரில் மரக்கன்று நடும் விழா

ஆர்எஸ்.மங்கலம், ஏப். 9: ஆர்எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி தலைமை வகிக்க, ஒன்றிய கவுன்சிலர் முஸ்ரியா பேகம், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜலாலுதீன் பட்டாணி மீரான் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் ஜெயகாந்தன் வரவேற்றார். விழாவில் மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்றால் இயற்கை காற்று அவசியம், அதற்கு சுற்றுச்சூழலை பாதுாக்க வேண்டும் எனக்கூறி மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நம்புராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ராமநாதன், கணேசன், பாலமுருகன், பாலன் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள், ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: