×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு

ஆர்.எஸ்.மங்கலம், ஏப். 20: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ் மற்றும் இளநீர் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பூர், திருப்பாலைக்குடி சோழந்தூர், சனவேலி, ஆனந்தூர் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இதேபோல் ஆரஞ்சுப்பழச்சாறு, முலாம்பழச்சாறு, கரும்புச்சாறு மற்றும் இளநீர் அருந்துகின்றனர். குறிப்பாக வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்ச்சத்து மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர் அதிகளவில் உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன. மேலும் இளநீரில் வைட்டமின் சத்து அதிகளவில் உள்ளது.

இதனால் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், சிறுநீரக பிரச்னைக்கு சிறந்தது என்பதால் பொதுமக்கள் இளநீர் அருந்தவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக நகரில் இளநீர் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இது குறித்து இளநீர் வியாபாரிகள் கூறுகையில், ‘‘சில தினங்களாக எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

இதனால் கடந்த காலங்களைக் காட்டிலும், தற்போது இளநீர் விற்பனை அமோகமாக உள்ளது. அதேசமயம் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், இளநீர் ரூ.50க்கு விற்பனை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் இடையே இளநீர் வாங்கி அருந்துவதில் ஆர்வம் குறையவில்லை’’ என்றனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Uppur ,Tiruppalaikudi Cholantur ,Sanaveli ,Anandur ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்