×

நம்மாழ்வார் 84வது பிறந்தநாள் அனுசரிப்பு

உசிலம்பட்டி, ஏப். 8: இயற்கை உரங்களை மீட்டெடுப்பது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது என விவசாயத்தில் புரட்சி செய்த நம்மாழ்வாரின் 84வது பிறந்ததினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. உசிலம்பட்டியில் உள்ள உழவர் சந்தையில் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். தொடர்ந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட அரிசியால் தயாரிக்கப்பட்ட பொங்கல் மற்றும் நாட்டு பசுமாட்டு பால் மற்றும் காய்கறிகளை சந்தைப்படுத்தி நம்மாழ்வாரின் பிறந்ததினத்தை அனுசரித்தனர்.

Tags : Nammazhvar ,
× RELATED நன்னிலத்தில் நம்மாழ்வார் நினைவு நாள்