×

கடத்தூரில் குட்கா விற்றவர் கைது

கடத்தூர், ஏப்.2:கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியிலிருந்து, கடத்தூருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்ய திண்டலானூர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை(45) என்பவர் டூவீலரில் எடுத்து வந்தார். கடத்தூர் போலீசார் டூவீலரை நிறுத்தி சோதனையிட்டு, ₹3750 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Gutka ,Kadatur ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது