×

ஆலங்காடு பள்ளியில் கல்வி விழிப்புணர்வு முகாம், பேரணி

முத்துப்பேட்டை, மார்ச் 31: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி சார்பில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் அமைத்தல் பற்றிய முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.முகாமை பள்ளி தலைமையாசிரியை கயல்விழி தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா கலந்து கொண்டு பேசினார்.இந்த முகாமில் சிறப்பு ஆசிரியர்கள் பத்மநாபன், அன்பரசன், சங்கர், கன்னியா மற்றும் ஆசிரியர்கள் அரசு, சுப்புலட்சுமி, ராஜலட்சுமி, வெண்ணிலா கலந்து கொண்டனர். முகாமை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி முக்கிய பகுதிகளுக்கு சென்று வந்தது. முடிவில் ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.

Tags : Education Awareness Camp ,Alankadu School ,Rally ,
× RELATED சிவகிரியில் மே தின பேரணி