×

பாபநாசத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகள் உடனடி தீர்வு

பாபநாசம். மார்ச் 29: பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான சிவகுமார் வழிகாட்டுதல்படி நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது.இதில் பாபநாசம் இந்தியன் வங்கி மற்றும் சக்கராப்பள்ளி, சுந்தர பெருமாள் கோவில் கிளை சார்பில் பயனாளிகள் வங்கி மூலம் பெற்ற கடனில் தற்போதைய நிலுவைத்தொகை, கடன் வட்டியை திரும்பச் செலுத்துவது சம்பந்தமான வழக்குகளுக்கான வங்கி மக்கள் நீதிமன்றம் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. வங்கி வழக்கிற்கான மக்கள் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்திரன் தலைமையில் வழக்கறிஞர் அறிவழகன், மக்கள் நீதி மன்ற உறுப்பினர் எழில்வாணன், இந்தியன் வங்கியின் பாபநாசம் கிளையின் மேலாளர்கள் சித்ரா மற்றும் சையதுநூர் பாட்ஷா ஆகியோர் பங்கேற்பில் நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிகளின் வாராக் கடன்களின் மீது விசாரணையும் பரிசீலனை செய்யப்பட்டது. மொத்தம் 12 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட தொகை மொத்தம் ரூ.12,48,000. மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப் பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

Tags : People's Court ,Papanasam ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...