×

குரும்பூண்டி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி மையம் ஆய்வு

கந்தர்வகோட்டை, மார்ச் 30: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் குரும்பூண்டி கிராமத்தில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி-சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின்படி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா மற்றும் தங்கராசு ஆகியோர் பார்வையிட்டனர். இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மீனா, கீதா, திவ்யா மகிழ்ச்சியுடன் கல்வி கற்றுத்தருகிறார்கள். தன்னார்வலர்களை பாராட்டிய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி தலைமையாசிரியர் அனுமதியுடன் பள்ளி வளாகத்தில் உள்ள கற்றல்- கற்பித்தல் வளாகத்தை தாங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்கள். பள்ளி முடிந்து வந்தும் குழந்தைகள் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு செல்வதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது ஒரு தனிப் பயிற்சி மையம் போல் உள்ளது என்று கூறினார்.

Tags : Education Center ,Kurumbundi village ,
× RELATED ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பு