×

ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பு

 

கோவை, ஏப். 29: கோவை காந்திபுரத்தில் உள்ள புத்தா ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் எல்.சி. குருசாமி கல்வி மையம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரபி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இலவசமாக பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘‘இந்த மையம் சார்பில் நடப்பு கல்வி ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 27 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் வாழ்வில் உயர் நிலையை அடையும்போது, கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு ஏணியாக இருந்து உதவ வேண்டும்.

எப்போதும் வெற்றியை பற்றிய சிந்தனை மட்டுமே கொள்வோர், நிச்சயம் வெற்றி அடைவார்கள்’’ என்றார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் அய்யனார், சுதா, மூர்த்தி, தமிழரசு, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் எஸ்.சி.-எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு கோவை மாவட்ட செயலாளர் மணிமாறன், பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன், சந்திரசேகர், வினோத், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Buddha ,IAS ,Gandhipuram, ,Academy ,L.C. Guruswamy Education Center ,Tamil Nadu ,Balsamaya… ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை