நாளை நடக்கிறது திருமுருகன் பூண்டி காவல்நிலையம் முன்பாக வாலிபர் மீது 20 பேர் கும்பல் சரமாரி தாக்குதல் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி

திருப்பூர்,மார்ச்25:  திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலையம் முன்பு வாலிபர் ஒருவரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருமுருகன்பூண்டி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய எல்லை பகுதியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், பின்னலாடை நிறுவனங்கள், வணிகவளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பொதுமக்கள் தினசரி பல்வேறு வழக்குகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்றிரவு திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியை சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்ற வாலிபர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதனை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த 20 பேர் கொண்ட கும்பல் அந்த வாலிபரை காவல் நிலையத்தில் எதிரிலேயே வைத்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்துகொண்டிருந்த திருமுருகன் பூண்டி போலீசார் தாக்குதல் நடத்திய  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்குதலுக்குள்ளான வாலிபரை  கண்டித்தனர். போலீசாரின் இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Related Stories: