×

பெரியாம்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் வழங்கும் முகாம்

காரிமங்கலம் மார்ச் 24: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானு சுஜாதா முகாமை துவக்கி வைத்து ேபசுகையில், ‘மாவட்டம் முழுவதிலும் உணவு பாதுகாப்பு உரிமம் முகாம் நடந்து வருகிறது. இம்முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த உணவு தயாரிப்பாளர்கள், மளிகை கடை, பேக்கரி, ஓட்டல் ஆகியவற்றை நடத்தி வரும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். குறிப்பாக உணவு பொருட்களின் மேல் புறங்களில் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, உணவு பாதுகாப்பு வணிக உரிம எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். முகாமில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற விண்ணப்பித்தனர். முகாமில் பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சங்கர், வணிகர் சங்க பிரதிநிதிகள் பழனி, நாகமணி, கோதண்டராமன், பஞ்சாயத்து செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Food Safety Department Licensing Camp ,Periyampatti ,
× RELATED பெரியாம்பட்டியில் இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி