×

கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச இணைப்பு சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மார்ச் 23: நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தொமுச இணைப்பு சங்கங்கள் மற்றும் தோழமை சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க  வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டைத் தவிர்த்திட வேண்டும். குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ₹21 ஆயிரம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags : Thomusa ,
× RELATED குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு...