×

₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம், ஜூன் 22: ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில், ₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம் போனது. ராசிபுரம்- சேலம் சாலை அருகே கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. இந்த மையத்தில் நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று 59,600 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனையானது. இதில், அதிகபட்சமாக கிலோ ₹570க்கும், குறைந்தபட்சமாக ₹561க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் ₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம் போனது.

The post ₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Rasipuram Cooperative Society ,Rasipuram- Salem road ,Namakkal ,Dinakaran ,
× RELATED விவசாயி பையில் கொண்டு சென்ற ரூ.500...