×

மாற்று இடம் வழங்கியதால் காளியம்மன் கோயில் இடமாற்றம்

சேலம், மார்ச் 19:சேலம் 4 ரோடு பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையம் செல்ல பாலத்தின் அடிப்பகுதியில் இணைப்பு சாலை உள்ளது. 4 ரோட்டில் பகுதியில் காளியம்மன் கோயில் இருப்பதால், அதனை அகற்றி விட்டு, சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சேலம் கோட்டாட்சியர் தலைமையில் 2 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கோயிலை இடமாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தாசில்தார் செம்மலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சந்தோஷ் குமார் தலைமையில், எல்லை காளியம்மன் கோயில் மூலவர் சிலை, பக்தர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக நேற்று அகற்றப்பட்டது. இதற்காக, நேற்று காலை 4 மணி முதல் 8 வரை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், எல்லை காளியம்மன் சிலையை அரிசிபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டது. புதியதாக கோயில் கட்ட வழங்கிய இடத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாற்று இடத்தில் பீடம் அமைக்கப்பட்ட பின்னர், மீண்டும் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

Tags : Kaliamman ,
× RELATED .3.76 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகள் திறப்பு