×

அனைத்து மண்டலங்களிலும் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்படும்: மேயர் பிரியா ராஜன் பேச்சு

சென்னை: ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்களுக்கான சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதற்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,  குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம்  உள்ளிட்ட 17 வகையான மருத்துவ வசதிகள் சிறப்பு மருத்துவர்களால்  அளிக்கப்படுகிறது.

அடையாறு மண்டலம் தரமணி, பாரதியார் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில்  மேயர் பிரியா ராஜன்  வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம், கோவிட் தடுப்பூசி முகாம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த மருத்துவ முகாமில் 30 மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.  பின்னர் மேயர் பிரியா ராஜன் பேசியதாவது:

ஏற்கனவே கொளத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தற்போது மூன்றாவது இடமாக தரமணியில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த முகாம்கள் மீதமுள்ள அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.  இதில்  துணை மேயர் மகேஷ்குமார், ஹசன் மவுலானா எம்எல்ஏ, துணை ஆணையாளர் மனிஷ்   ஆகியோர் கலந்து  கொண்டனர்.

Tags : Mayor ,Priya Rajan ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!