×

ஈரோட்டில் 5ம் தேதி என்எம்எம்எஸ் தேர்வு

ஈரோடு, மார்ச் 3: ஈரோடு மாவட்டத்தில் வரும் 5ம் தேதி என்எம்எம்எஸ் தேர்வு 24 மையங்களில் நடைபெற உள்ளது. ஒன்றிய  அரசு சார்பில் ஆண்டு தோறும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக  தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தொகை திட்ட தேர்வு (என்எம்எம்எஸ்)  நடத்தப்படும். இத்தேர்வில் மாவட்ட அளவில் தகுதி பெறும் 250 பேரை தேர்வு  செய்து அவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் வரை அதாவது 4 ஆண்டுகளுக்கு  மாதந்தோறும் ரூ.1,000 என ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை அரசால்  வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு  வரும் 5 தேதி ஈரோடு மாவட்டத்தில் 24 மையங்களில் நடக்கிறது.

 தேர்வினை  நடப்பாண்டில் 8ம் வகுப்பு படிக்கும் 4,825 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வானது மன திறன், படிப்புத்திறனை அடிப்படையாக கொண்டும், சமூக அறிவியல்,  அறிவியல், கணிதம் போன்ற பாடப்பகுதியில் இருந்து 90 மதிப்பெண்களுக்கு  வினாக்களுக்கு நடக்கும். தேர்வு காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்கு  நிறைவு பெற உள்ளது. இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போலீஸ்  பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Erode ,
× RELATED மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு