×

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 400 இளநிலை வரை தொழில் அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சங்கம் சார்பில் முதன்மை செயலாளருக்கு கடிதம்

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை பட்டயப்பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் மாரிமுத்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலைத்துறை அரசாணை 82ன்படி இளநிலை பொறியாளர் பணியிடத்தை உறுதிப்படுத்தப்படவில்லை. உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வு பெறுவதற்கு 5 வருடம் பணி அனுபவம், இளநிலை பொறியாளர்களுக்கு மட்டும் 10 வருடம் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, சமூக நீதிக்கு எதிராக உள்ளது. எனவே, ஒரே பணி அனுபவ தகுதியை எடுத்து கொண்டு இளநிலை பொறியாளர்களுக்கும் 5 வருட பணி அனுபவத்தில் உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் டிப்ளமோ சிவில் கல்வி தகுதியும் மற்றும் 10 வருடங்களக்கு மேல் அனுபவம் உள்ள திறன்மிகு உதவியாளர்களுக்கு விதியில் இடம் இருந்தும் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு பல வருடங்களாக வழங்கப்படவில்லை. தற்போது சுமார் 400க்கும் மேற்பட்ட இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே, உடனடியாக பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 400 இளநிலை வரை தொழில் அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சங்கம் சார்பில் முதன்மை செயலாளருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Highway Department ,Chennai ,Tamil Nadu ,Highway Department Chartered Engineers Association ,General Secretary ,Marimuthu ,Highway Department ,Principal ,Dheerajkumar ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...