×

உலகநாதபுரத்தில் அற்புதக் குழந்தை இயேசு கோவில் திறப்பு

பரமக்குடி,பிப்.25:  சிவகங்கை மறைமாவட்ட பரமக்குடி உலகநாதபுரத்தில் அற்புதக் குழந்தை இயேசு கோவில் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேனாள் ஆயர் சூசை மாணிக்கம் கோவிலை அர்ச்சித்து திறந்து வைத்தார். மறைமாவட்ட பொருளாளர் தந்தை சந்தியாகு கல்வெட்டை திறந்து வைத்தார். அருள்தந்தை திரவியம், செபஸ்தியான் நன்கொடையாளர்கள் கல்வெட்டை திறந்து வைத்தனர். புதிய கொடி மரத்தை அர்ச்சித்து திருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அர்ச்சிப்பு திருப்பலி மேலாளர் சூசை மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. அருள்தந்தை பங்கு பணி தாமஸ் மறையுரை நிகழ்த்தினார்.

பங்கு பணியாளர் சிங்கராயர் அனைவரையும் வரவேற்றார். செயலர் ஆசிரியர் ரிச்சர்ட் அற்புத குழந்தை இயேசு ஆலயம் வரலாற்றினை எடுத்து கூறினார். சிவகங்கை மறைமாவட்ட திருவெளிப்பாட்டு பணிக் குழு செயலர் தந்தை யோசுவா மற்றும் திருவரங்கம் திருஇருதய பள்ளியின் தாளாளர் சிங்கராயர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். ஆனந்தா கல்லூரி பேராசிரியர் அருள்தந்தை டென்சிங் பாடல் குழுவினர் வழி நடத்தினர்.

அர்ச்சிப்பு விழாவுக்கு திரளான அருள் தந்தையர்களும், அருள் சகோதர சகோதரிகளும், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர், பரமக்குடி வட்டார பார்க்கவ குல சங்க தலைவர், மேலக்காவனூர் எஸ்.எம்.டி.பாரத் பெட்ரோலியம் ஏஜென்சிஸ் நிறுவனர் எஸ்.எம்.டி அருளாந்து,ஏ.பி. மஹால் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் அருள் பிரகாஷ் மற்றும்  பொது மக்கள்  கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பில் விருந்து பரிமாறப்பட்டது.

Tags : Amazing Baby Jesus Temple ,Ulakanathapuram ,
× RELATED குடிநீர் முறையாக வழங்க கோரிக்கை பரமக்குடி உலகநாதபுரத்தில்