×

பேரம்பாக்கம் பஜார் வீதியில் நீதிமன்ற உத்தரவால் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கத்தில் பஜார் வீதியில் முக்கிய சாலையில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பஜார் வீதி என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருவள்ளூர் கோட்டாட்சியர் எம்.ரமேஷ் மேற்பார்வையில் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி துறையினர் ஆகியோர் காவல்துறையின் பாதுகாப்போடு ஆக்கிரமித்த பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடைகளில் உள்ள பொருட்களை கடை உரிமையாளர்களே எடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் ஸ்வீட் கடை, செருப்பு கடை, துணிக்கடை உள்ளிட்ட 7 கடைகளும், குடிசைகள் அமைத்து காய்கறி, பழ கடை, பூக்கடை போன்ற பல்வேறு விதமான கடைகள் நடத்தி வந்த 28 கடைகளும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கடைகள் அகற்றப்பட்டது. இதனால் பேரம்பாக்கம் பஜார் வீதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Perambakkam Bazaar Road ,
× RELATED பேரம்பாக்கம் பஜார் வீதியில் நீதிமன்ற...