×

இன்று வாக்கு எண்ணிக்கை நைட்டிங்கேல் பிசியோதெரபி கல்லூரி துவக்கம்

கோவை, பிப்.22: கோவை நைட்டிங்கேல் கல்வி குழுமம் மற்றும் சி.எஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய பிசியோ தெரபி கல்லூரி துவக்க விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்துறை ஊனமுற்ேறாரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவன தேர்வு கட்டுபாட்டு அதிகாரி டாக்டர் மதிவாணன் குத்து விளக்கேற்றி கல்லூரியை  துவக்கி வைத்தார்.

இதில், நைட்டிங்கேல் கல்வி குழும சேர்மன் மனோகரன் வரவேற்றார். நடராஜ் மருத்துவமனை இயக்குநர் நடராஜன், நர்சிங் கல்லூரி முதல்வர் பால்ராஜ் சீனிதுரை,   கொங்குநாடு அப்ளைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி  பாட இயக்குநர் பொன்னியன் செல்வன் எமரால்டு, பிசியோ தெரபி கல்லூரி முதல்வர் ராஜன் நேதாஜி, அறங்காவலர்கள் ராஜிவ், சஞ்சய் உட்பட கலந்து ெகாண்டனர்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் கேரியர் கைடன்ஸ் கோர்ஸ் நடத்துவதற்கான மத்திய அரசின் மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலமாக, 100 சதவீத வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு நைட்டிங் கேல் பிசியோ தெரபி கல்லூரியில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nightingale College of Physiotherapy ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி