×

9வது வார்டில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் திமுக வேட்பாளர் வக்கீல் தெய்வலிங்கம் பிரசாரம்

சேலம், பிப்.18: சேலம் மாநகராட்சி 9வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வக்கீல் தெய்வலிங்கம், நேற்று வார்டு முழுவதும் கூட்டணிக்கட்சியினருடன் பேரணியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் வக்கீல் தெய்வலிங்கம் பேசியதாவது: நான் அருகில் உள்ள 10 வார்டில் திமுக கவுன்சிலராக இருந்துள்ளேன். அந்த வார்டில் என்னென்ன பணிகளை செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோதே, மாநகராட்சியில் போராடி, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியிருக்கிறேன். தற்போது, இந்த 9வது வார்டில் சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் வசதி, கழிவறை வசதி, சுகாதார மேம்பாடு என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தருவேன். என்னை வெற்றிப்பெறச் செய்யுங்கள். நான், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், அடிப்படை தேவைகளை இல்லம் தேடி வந்து பூர்த்தி செய்வேன். தினமும் காலை 7 மணிக்கு முன்பாக என்னை இந்த வார்டில் பார்க்கலாம். கடந்த தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கான ₹1000 உரிமைத்தொகையை விரைவில் வழங்குவதாக முதல்வர் கூறியுள்ளார். அந்த தொகையை பெற்றுத்தருவேன். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெறச் செய்யுங்கள், என்றார். பிரசாரத்தில், திமுக நிர்வாகிகள் சௌந்தரராஜன், சம்பத், பெருமாள், லோகு, காங்கிரஸ் நிர்வாகி ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags : 9th Ward ,Udayasooriyan ,DMK ,Deivalingam ,
× RELATED போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து