ஆலந்தூர் 166வது வார்டில் குடிநீர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு: திமுக வேட்பாளர் என்.சந்திரன் உறுதி

ஆலந்தூர், பிப்.12: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 166வது வார்டு திமுக வேட்பாளர் என்.சந்திரன் நேற்று நங்கநல்லூர் காந்தி நகர், பர்மா தமிழர் காலனி போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, மகளிர் அணியை சேர்ந்தவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் என்.சந்திரன் பேசுகையில், ‘‘கொரோனா ஊரடங்கு, மழை வெள்ளம் சூழ்ந்த நேரங்களில் உங்களுக்கு உதவியாக இருந்துள்ளேன். என்னை வெற்றி பெற செய்தால், அரசின் திட்டங்கள் அனைத்தையும் இங்கு விரைந்து செயல்படுத்துவேன். குடிநீர் பிரச்னை தீர்க்க சின்டெக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் வழங்குவேன்.

தெருவிளக்கு, குப்பை அகற்றும் பணிகளை தினசரி கண்காணிப்பேன்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது 166வது வட்ட திமுக பொறுப்பாளர் உலகநாதன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பாண்டிச்செல்வி, வெள்ளைச்சாமி, பி.செல்வம், மாரிமுத்து, கேபிள் ராஜா, பி.ஆர்.சுரேஷ், விக்னேஷ், கங்காதரன், பி.மணிவண்ணன், சி.சேகர், ஜெ.மோகன், சிவா ஆர்ட்ஸ் கிருஷ்ணமூர்த்தி, மகளிரணி விஜயலட்சுமி, ஆண்டாள், ரமீதா, காங்கிரஸ் சார்பில் வட்ட தலைவர் சி.கே.ஏழுமலை, தேவராஜ், சாலமோன், சீனிவாசன், மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொகுதி துணை செயலாளர் சி.வெற்றி, மகேஷ், பாலாஜி செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: