×

ராமநாதபுரம் நகராட்சி தேர்தல் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

ராமநாதபுரம், பிப். 11: ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. திராவிட இயக்க  தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை வகித்து பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் 8 மாத ஆட்சியின் சாதனைகளை கூறி வேட்பாளர்கள் மக்களிடம் வாக்குசேகரிக்க வேண்டும்’ என்றார்.

இதில் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் முருகபூபதி,  ராமநாதபுரம் நகர் செயலாளர்கள் கார்மேகம் (வடக்கு), பிரவீன் தங்கம் (தெற்கு),  தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Ramanathapuram Municipal Election DMK Alliance Candidates Introductory ,
× RELATED ராமநாதபுரம் நகராட்சி தேர்தல் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்