×

புதுச்சேரியில் புதிதாக 149 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, பிப். 12: புதுச்சேரியில் புதிதாக 149 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 2,379 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 91, காரைக்காலில் 42, ஏனாம் 9, மாகே 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பாரதிபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,957 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக இருக்கிறது. தினசரி தொற்று பரவலை பொறுத்தவரை 6.26 சதவீதமாகவும், குணமடைவது 97.61 சதவீதமாகவும் உள்ளது.நேற்று, 661 பேர் குணமாகி வீட்டுக்கு திரும்பினர். மருத்துவமனைகளில் 56 பேரும், வீடுகளில் 1,937 பேரும் என மொத்தம் 1,993 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,65,071 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,61,121 பேர் குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 15,52,190 பேர் (நேற்று 1,276 பேர்) தடுப்பூசி போட்டுள்ளனர்.

Tags : Corona ,Pondicherry ,
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...