(தி.மலை) பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு 1ம் தேதி வரை அவகாசம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

திருவண்ணாமலை, பிப்.12:வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவு தாரர்கள் தங்களது பதிவுகளை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லோ.யோகலட்சுமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இச்சலுகையை பெறவிரும்பும் பதிவுதாரர்கள் வரும் 1ம் தேதிக்குள் www://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்கள் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம். இணையதளம் மூலம் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ, பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: