×

திம்பம் மலைப்பாதையில் இரவில் வாகனப் போக்குவரத்துக்கு தடை நேற்று மாலை முதல் அமலானது

சத்தியமங்கலம், பிப்.11: திண்டுக்கல்  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. 2019ஆம் ஆண்டு ஈரோடு கலெக்டர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேற்று சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் வனத்துறையினர் மாலை 6 மணிக்கு 10 சக்கரங்கள் மற்றும் 12 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இரவு 9 மணி வரை நான்கு சக்கர வாகனங்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் ஆறு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் இரவு ஒன்பது மணிக்கு மேல் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு  பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கர்நாடக மாநிலம் நோக்கி செல்வதற்காக வந்த கனரக வாகனங்களை வனத்துறை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் இரவு 9 மணிக்கு மேல் எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியாதபடி சாலையில் தடுப்பு அரண்கள் வைத்து தடுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thimphu Hill Road ,
× RELATED திம்பம் மலைப்பாதையில் காய்கறி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து