×

விருதுநகர் மாவட்டத்தில் 1,613 வேட்பாளர்கள் போட்டி: 529 பேர் வேட்புமனுக்கள் வாபஸ்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் 529 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இறுதியாக 1,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி 48 வார்டுகளில் 322 மனுக்களில் 4 தள்ளுபடி 50 வாபஸ், இறுதியாக 268 பேர் களத்தில் உள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சி 36 வார்டுகளில் 210 மனுக்களில் 2 தள்ளுபடி, 58 வாபஸ் இறுதியாக 150 பேர் போட்டியிடுகின்றனர். ராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளில் 293 மனுக்களில் 8 தள்ளுபடி செய்யப்பட்டன. 89 வாபஸ் பெறப்பட்டதால் இறுதியாக 196 பேர் போட்டியிடுகின்றனர்.

சாத்தூர் நகராட்சியில் 150 பேரின் வேட்புமனுக்களில் 7 தள்ளுபடி செய்யப்பட்டது. 49 பேர் வாபஸ் பெற்றபின் 94 பேர் போட்டியிடுகின்றனர். திருவில்லிபுத்தூர் நகராட்சி 33 வார்டுகளில் 230 மனுக்களில் 10 தள்ளுபடியானது. 78 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 142 பேர் போட்டியிடுகின்றனர். விருதுநகர் நகராட்சி 189 மனுக்களில் 30 வாபஸ் பெறப்பட்டன. 159 பேர் போட்டியிடுகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் 171 வார்டுகளில் 1072 வேட்பு மனுக்களில் 27 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 304 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இறுதியாக 741 பேர் போட்டியிடுகின்றனர். 9 பேரூராட்சிகளில் செட்டியார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளில் 99 மனுக்களில் 3 தள்ளுபடி, 30 வாபஸ் பெறப்பட்டதால் 66 பேர் போட்டியிடுகின்றனர். காரியாபட்டி பேரூராட்சியில் 92 மனுக்களில் 1 தள்ளுபடி, 43 வாபஸ் பெறப்பட்டது. இறுதியாக 48 பேர் போட்டியிடுகின்றனர். மல்லாங்கிணறு பேரூராட்சியில் 56 மனுக்களில் 12 வாபஸ் பெற்றதால் இறுதியாக 44 பேர் போட்டியிடுகின்றனர். மம்சாபுரம் பேரூராட்சியில் 132 மனுக்களில் 15 தள்ளுபடி செய்யப்பட்டன. 22 வாபஸ் பெறப்பட்டதால் 95 பேர் போட்டியிடுகின்றனர்.

எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி 97 மனுக்களில் 1 தள்ளுபடி, 26 வாபஸானதால் 70 பேர் போட்டியிடுகின்றனர். சேத்தூர் பேரூராட்சியில் 123 மனுக்களில் 23 வாபஸ் பெறப்பட்டது. இறுதியாக 100 பேர் போட்டியிடுகின்றனர். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் 38 மனுக்களில் 1 தள்ளுபடி, 1 வாபஸ் பெறப்பட்டதால் 36 பேர் போட்டியிடுகின்றனர்.

வ.புதுப்பட்டி பேரூராட்சியில் 66 மனுக்களில் 16 வாபஸ் பெறப்பட்டதால் 50 பேர் போட்டியிடுகின்றனர். வத்திராயிருப்பு பேரூராட்சியில் 97 மனுக்களில் 2 வாபஸ் பெறப்பட்டது. 95 பேர் போட்டியிடுகின்றனர். இந்த 9 பேரூராட்சிகளில் 144 வார்டுகளில் 800 மனுக்களில் 21 தள்ளுபடி, 175 வாபஸ் பெறப்பட்டதால் இறுதியாக 604 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் மொத்தம் 363 வார்டுகளில் 2194 மனுக்களில் 52 மனுக்கள் தள்ளுபடி, 529 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து 1613 பேர் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர்கள் சின்னங்களுடன் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரசாரம் இன்று முதல் களைகட்ட துவங்கும். தேர்தல் வாக்குப்பதிவு பிப்.19, வாக்கு எண்ணிக்கை பிப்.22ல் நடைபெறுகிறது.

Tags : Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...