×

மன்னார்குடி அருகே திருராமேஸ்வரத்தில் பயறுவகைகள் சாகுபடி செய்ய வலியுறுத்தி வேளாண் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மன்னார்குடி, பிப். 7: மன்னார்குடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட் மா திட்டத்தின் கீழ் கலை நிகழ்ச்சிகள் மூலம் நெல்லுக்கு மாற்றாக பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய வலியுறுத்தி வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஊராட்சி மன்ற தலைவர் பாமா கண்ணன் தலைமையில் திருராமேஸ்வரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து மன்னார்குடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் பேசுகையில், மன்னார்குடி வட்டாரத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பருவ நெல் பயிர்கள் அறுவடை நிலையில் உள்ளது. இத்தருணத்தில் விவசாயிகள் உளுந்து அல்லது பச்சைப்பயறு பயிர்களை சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு, குறுகிய காலத்தில் அதிக லாபத்தினையும் ஈட்டலாம் தொடர்ச்சியாக நெல் சாகுபடியில் ஈடுபட்டால் மண்ணின் வளம் குன்றுதல், பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் அதிகரித்தல் மற்றும் மண்ணின் உவர் தன்மை அதிகரிக்கும். நெல்லிற்கு மாற்றாக பயறுவகை பயிர்களை சாகுபடி செய்தால் இவற்றை தடுக்கலாம்.

விவசாயிகள் பாசன வசதி குறைவாக இருக்கும் பகுதிகளில், அறுவடைக்கு நான்கு தினங்கள் முன்னதாக வயலில் உள்ள ஈரப்பதத்தை கொண்டு மெழுகு பதத்தில் உளுந்து அல்லது பச்சைப் பயறு போன்ற பயறுவகை பயிர்களை விதைத்து நெல் அறுவடைக்குப் பின் அதனை பராமரித்து சாகுபடி செய்தால் நல்ல மகசூல் பெற்று வருமானத்தை ஈட்டலாம் அவ்வாறு சாகுபடி செய்யும் போது விவசாயிகளுக்கு அதிக சாகுபடி செலவின்றி வருமானம் கிடைப்பதோடு, இவ்வகை பயிர்கள் காற்றில் உள்ள தழை ச்சத்தினை கிரகித்து நிலத்தில் நிலைப்படுத்துவதால் நிலத்தினுடைய தழைச் சத்துகள் அதிகரித்து மண் வளம் கூடுகிறது.

இந்த பயறுவகை பயிர்கள் அறு வடையின் போது வேர்களில் உள்ள வேர்முடிச்சுகளில் காணப்படும் நைட் ரஜன் சத்துகள் மண்ணிற்கு நேரடியாக கிடைக்கப்பெற்று மண்ணின் வளத் தினை அதிகரிக்கிறது என்றார். உளுந்து சாகுபடியில் அறுவடைக்கு பிறகு கிடைக்கப்பெறும் உளுந்து செடி யானது கால்நடைகளுக்கு மிகச் சிறந்த புரத உணவாகவும் பயன்படுகிறது என அனைத்து தகவல்களும் நாடகத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு எடுத் துரைக்கப் பட்டது. இவ்வாறு வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் தெரி வித்தார். நிகழ்ச்சியில், உதவி வேளாண் அலுவலர் புவனா, அட்மா திட்ட அலுவலர்கள் செல்வகுமார் , மணிமாறன்உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Thirurameswaram ,Mannargudi ,
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...