×

சுசீந்திரம் கோயிலில் புதிய சண்டிகேஸ்வரர் சிலை நாளை பிரதிஷ்டை

சுசீந்திரம், பிப்.2: சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயில் உட்பிரகாரத்தின் தெற்கு பகுதியில் சண்டிகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. அங்குள்ள சிலையின் கழுத்து பகுதி , கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  சேதம் அடைந்தது. இதையடுத்து பக்தர்கள் புதிய சண்டிகேஸ்வரர் சிலை  நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மயிலாடி பகுதியில் செய்யப்பட்ட புதிய சண்டிகேஸ்வரர் சிலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  வருகிறது. நாளை(பிப்.3) காலை சிறப்பு பூஜைகள், வேள்விகள் செய்யப்பட்டு ஏற்கனவே இருக்கும் சண்டிகேஸ்வரர் சிலை. அகற்றப்பட்டு அதே இடத்தில் புதிய சண்டிகேஸ்வரர் சிலையை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

Tags : Chandikeswarar ,Suchindram Temple ,
× RELATED சித்திரை திருவிழா 7ம் நாள்;...