×

தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை

பண்ருட்டி, பிப். 1: பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இன்ஸ்பெக்டர் ராஜதா
மரைபாண்டியன் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. செயல் அலுவலர் வைஜெயந்தி தலைமையிலான குழுவினர் சுவற்றில் எழுதப்பட்டுள்ள அரசியல் மற்றும் விளம்பரங்களை அழிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும்படை அலுவலர் சேகர், சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வநாயகம் மற்றும் போலீசார் முன்னிலையில் புதுப்பேட்டை, பண்டரகோட்டை,
அம்மாபேட்டை மெயின்ரோட்டில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் உரிமையாளருக்கு தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி அதிகமான பணத்தை எடுத்து சென்றால் பறிமுதல் செய்வோம், ஆவணங்கள் முறையாக இருக்க வேண்டும் என எச்சரித்து அனுப்பினர்.   

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி, மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகனங்களில் ஏதேனும் பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என தாசில்தார் செல்வமணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை புறவழிச்சாலை, வேடப்பர் கோயில், மணவாளநல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்களுக்கு உரிய ரசிது உள்ளதா, சந்தேகத்துக்கு இடமாக வாக்காளர்களுக்கு கொடுக்கும் வகையில் பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகின்றதா என தணிக்கை பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...