×

பணி வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு அமைப்பாளர் பெற்றோருடன் தர்ணா

பெரம்பலூர்,பிப்.1: பெரம்பலூர் மாவட்டம், குன் னம் தாலுக்கா பெரியம்மா பாளையம் கிராமத்தை சே ர்ந்தவர் அழகேஸ்வரி(45). ஒதியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்து ணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று(31ம்தேதி) காலை தனது வயதான பெற்றோருடன் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்குவந்து, கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். இதுகுறித்து அவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நான் முதலில் வேப்பூரிலும், பிறகு 3வருடம் கள்ளம் புதூரிலும் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்தேன். அப்போதுஎனக்கு இடதுகை முறிவு ஏற்பட்டதால் பின்னர் ஒதியத்திற்குப் பணி மாற்றம் வழங்கினர்.அங்கு எனக்கு மேலே பணிபுரிந்து வருபவரும், எனக்குக் கீழே பணிபுரிந்து வருபவரும் பிரச்னை.

செய்ததால் தற் கொலைக்கு முயன்று, பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்ந் து சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த மாதம் நடந்த நிகழ்வின் காரணமாக டிசம்பர் 22ஆம் தேதியன்று ஒதியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிலிருந்து விடு விக்கப்பட்டு உள்ளேன். ஆனால் இன்றுவரை எனக்கு வேறு எந்த பள்ளி சத்துணவு மையத்திலும் பணி வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. சஸ்பெண்டும் செய்ய ப்படவில்லை. நான்எப்படி எனது பெற்றோருக்கு சாப்பாடு போட்டு என்னால் குடு ம்பம் நடத்தமுடியும்.தற்போது தமிழக அரசு உத்தரவின் படி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், எனது சொந்த ஊரில் எனக்கு மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Tarna ,Perambalur Collector's Office ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...