×

525 கி.மீ. விமான தூரம் பறக்கும் போட்டி காயல்பட்டினம் புறாவுக்கு முதல் பரிசு

ஆறுமுகநேரி, ஜன. 31:  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ரேசிங் பீஜீயன் கிளப் சார்பில் 6ம் ஆண்டு புறாக்கள் பறக்கும் பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. சென்னை பெரும்புதூர் முதல் காயல்பட்டினம் வரை 525 கி.மீ. விமான தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 51 புறாக்கள் கலந்து கொண்டன. காயல்பட்டினம் மரைக்காயர் பள்ளி தெருவைச் சேர்ந்த சல்மான் என்பவரது புறா 6 மணி நேரம் 35 நிமிடத்தில் வந்தடைந்து முதல் பரிசை பெற்றது. பெரிய நெசவு தெருவை சார்ந்த இப்னு மாஜா என்பவரது புறா 6 மணி நேரம் 39 நிமிடம் 34 வினாடியில் வந்து இரண்டாம் இடத்தை பெற்றது. காட்டு தைக்கா தெருவை சேர்ந்த இம்ரான்கான் என்பவரது புறா 6 மணி நேரம் 48 நிமிடம் 14 வினாடியில் வந்து மூன்றாம் இடத்தை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் காயல்பட்டினம் ரேசிங் பீஜீயன் புறா கிளப்பின் சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் முகமது ரியாஸ், துணைத்தலைவர் லெப்பை, செயலாளர் முகம்மது காசிம், பொருளாளர் அகமத், துணைப் பொருளாளர் இப்னு மாஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்