×

நல்லம்பள்ளி அருகே குட்கா கடத்திய வழக்கில் வேன் உரிமையாளர் கைது

நல்லம்பள்ளி, ஜன.29: டெல்லியிலிருந்து ரயில்வே தண்டவாள உதிரி பாகங்களை ஏற்றிய லாரி ஒன்று, கேரள மாநிலத்தை நோக்கி சென்றது. நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் அருகே, நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த லாரியின் பின்னால் பெங்களூருவிலிருந்து சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவர் தப்பியோடியது தெரியவந்தது.

வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சரக்கு வாகனத்தில் இருந்த, ₹4லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம், சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (31) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து தொப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags : Gutka ,Nallampalli ,
× RELATED மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது..!!