×

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்றது

பட்டுக்கோட்டை, ஜன.28: பட்டுக்கோட்டை நாடியம்மன்கோயில் திருக்குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில். இந்த கோயிலின் திருக்குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24 ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை வரை 6 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்பட்டு அருள்மிகு நாடியம்மனுக்கு திருக்குடமுழுக்கு நடந்தது. சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர்.

அதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை அருள்மிகு நாடியம்மனுக்கு மஹா அபிஷேகமும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் திருக்குடமுழுக்கு குழுத்தலைவர் பாரத், திருக்குடமுழுக்கு விழாக் குழுவினர்கள் எஸ்.ஆர்.என். செந்தில்குமார், தியாகராஜன், ஜவகர்பாபு, பிரியாஇளங்கோ, மலையப்ப செட்டியார், கடம்பநாதன், பழனியப்பன்களப்பாடியார், கார்த்திகேயன், ராமசாமி, செல்வராஜ், ஜெயவீரபாண்டியன், வெங்கடேசன், எஸ்.கே.செந்தில்குமார், மணிமுத்து, டாக்டர் தமிழரசன், மணிகண்டன், சிங்காரம் செட்டியார், ரவிக்குமார், இயலரசன், சுந்தரம், கணேசன் நாடார், சூர்யவர்மன், இளமுருகு, சந்திரரமேஷ், சரவணன், ராயல்குமார், தர், பன்னீர்செல்வம், பொன்ஜீவா, மயில்வாகணன், அழகேசன், ராஜேந்திரன், தனபால், எம்.செந்தில்குமார், ரமேஷ், சுரேஷ்கண்ணா, வழக்கறிஞர் செல்வராஜ், பட்டுக்கோட்டை எஸ்.எஸ்.எம். ஜுவல்லரி உரிமையாளர் எஸ்.ஜி.ராஜகோபால், தஞ்சை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், பட்டுக்கோட்டை சரக ஆய்வாளர் பிரகாஷ், நாடியம்மன் கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

21 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதால் பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தாயே நாடியம்மா என்று விண்ணதிர முழக்கமிட்டு கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று மஹா கும்பாபிஷேகத்தை கண்டு நாடியம்மனை வழிபட்டுச் சென்றனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்குடமுழுக்கு குழுத்தலைவர் பாரத் மற்றும் திருக்குடமுழுக்கு விழாக்குழுவினர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதால் பட்டுக்கோட்டையே விழாக்கோலம் பூண்டது.

Tags : Pattukottai Nadiamman Temple Thirukudamulu Festival ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ