×

காரைக்கால் அருகே கல்லூரி மாணவரை வீடு புகுந்து தாக்கிய ஜிம் மாஸ்டர் உள்பட 2 பேருக்கு வலை

காரைக்கால், ஜன.22: காரைக்கால் அருகே தூங்கிக்கொண்டிருந்த கல்லூரி மாணவரை வீடு புகுந்து தாக்கிய ஜிம் மாஸ்டர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியை அருகே வரிச்சிக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்(22), கல்லூரி மாணவர். இவர் ராயன்பாளையத்தில் தங்கமணி(23) என்பவரின் உடற்பயிற்சி மையத்துக்குப் போய் வந்தார். புரோட்டின் பவுடர் விற்பனை தொடர்பாக ராஜேஷுக்கும், தங்கமணிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் தங்கமணியின் உடற்பயிற்சி மையத்துக்குப் போவதை ராஜேஷ் தவிர்த்து காரைக்காலில் ஒரு மையத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் காம்பவுண்டு சுவரைத் தாண்டி தங்கமணி, கோட்டுச்சேரி ராகவாஸ் நகர் ராஜேந்திரன் மகன் பரசுராமன்(18) இருவரும் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளனர். வீட்டில் பெற்றோர் இருப்பதால் தன்னால் வரமுடியாது என்று ராஜேஷ் மறுத்தார். அவரை வலுக்கட்டாயமாக வெளியே வரவழைத்த இருவரும் வாசலிலிருந்த அன்னக்கூடையால் அடித்துள்ளனர். ராஜேஷின் கையிலிருந்த செல்போனை பறித்து, ராஜேஷின் நண்பர்கள் அஜய், அஜித்குமாரை வரவழைத்து அவர்களையும் தாக்கினர்.தங்கமணியும், பரசுராமனும் ராஜேஷை கேவலமாகத் திட்டுவதைக் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்தனர். அதைப்பார்த்தது இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ராஜேஷ் புகாரளித்தார். இது பற்றி விசாரணை மேற்கொண்ட சப்.இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிம் மாஸ்டர் தங்கமணி மற்றும் பரசுராமனை தேடி வருகின்றனர்.

Tags : Jim Master ,Karaikal ,
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...