திருவாரூர் மாவட்டத்தில் ஈர நிலம் குறித்த புகைப்பட போட்டி

மன்னார்குடி, ஜன.21: திருவாரூர் மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :தமிழ்நாடு வனத்துறை மூலம் பிப்ரவரி 2ம் தேதி ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில், ஜனவரி 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை இணைய வழியாக நடைபெறும் ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டியில் தகுதியான அனைவரும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஈரநிலம் நண்பர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது புகைப்படம் மற்றும் அதுகுறித்தான பதிவுகளை வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் dfothiruvarur@gmail.com என்ற இணைய தள முகவரிக்கு மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களை மா வட்ட அளவில் கலெக்டர் தலைமையிலான தணிக்கை குழு தேர்வு செய்ய உள்ளது. பரிசளிப்பு நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எனவே, ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

Related Stories: