×

வீணாக செல்லும் குடிநீர் பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

பெரம்பலூர்,ஜன.21: பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவி முதன்முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தின் தலைநகராக விளங்கி வரும் பெரம்பலூர் நகராட்சி 11 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சியாக இருந்து வந்தது. தற்போது தரம் உயர்த்தப்பட்டு இரண்டாம் நிலை நகராட்சி ஆகவே உள்ளது.பெரம்பலூர் நகராட்சி வரலாற்றில் இதுவரை ஆண்களுக்கு மட்டுமே தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் நகராட்சி முதல் முறையாக பெண்களில் பொதுவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய 3 பகுதிகளை கொண்ட பெரம்பலூர் நகராட்சி 21 வார்டுகளை கொண்டுள்ளது. இதில் 1, 2, 3, 4, 7, 11, 12, 18 ஆகிய வார்டுகள் பெண்களில் பொதுவினருக்கும், 5, 10, 13, 14,15, 17, 21 ஆகிய வார்டுகள் பொதுவினருக்கும், 6,8,20 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோரில் பொதுவினருக்கும், 9,16,19 வார்டுகள் தாழ்த்தப்பட்டோரில் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 11 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Perambalur ,Municipal ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி