×

தேசிய அளவில் குங்பூ, டேக்வாண்டோ போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

பெரம்பலூர், ஜன.20: குங்பூ, டேக்வாண்டோ போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்ற சாதனையாளர்க ளுக்கு டிஎஸ்பி சஞ்சிவ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.பெரம்பலூரை மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட் பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தை சேர்ந்த தற்காப்புக் கலை பயிற்றுனர்கள் சதீஷ்குமார் (30), மணிகண்டன் (26). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்ட அனைவரு க்கும் கல்வி இயக்கத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளு க்கு குங்பூ, கராத்தே, டேக் வாண்டோ போன்ற தற்கா ப்புக்கலைகளை பயிற்றுவி த்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூ ரில் நடந்த தேசிய அளவிலான அனைத்து வயதின ருக்குமான தற்காப்புக்கலைப் போட்டியில் சதீஷ்குமார் குங்பூ போட்டியில் சூப்பர்சீனியர் பிரிவிலும், மணி கண்டன் டேக்வாண்டோ போட்டியில் சீனியர் பிரிவிலும் அதிக புள்ளிகளை பெற்று தங்கபதக்கம் வென்றனர். இதனையடுத்து, தேசிய அளவில் சாதனைபுரிந்த சதீஷ்குமார், மணிகண்டன் ஆகியோரை பெரம்பலூர் ச ரக டிஎஸ்பி (சட்டம்ஒழுங்கு) சஞ்சீவ்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


Tags :
× RELATED பெரம்ப லூர் மாவட்டம் 96.44 சதவீதம்...