×

ஒப்பந்ததாரரை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் ஒட்டன்சத்திரத்தில் ேபாராட்டம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சுமார் 120 பேர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக இ.பி.எப் பிடித்த பணம் வந்துசேரவில்லை எனவும், நிலுவையில் உள்ள சம்பளப் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அடையாள அட்டை வேண்டியும், ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் முத்துச்சாமி, டி.எஸ்.பி. சோமசுந்தரம் ஆகியோர் நேரில் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி தரப்பில் ஆணையாளர் தேவிகா கூறுகையில், ‘சம்பளப்பணம் மாதமாதம் ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படுகிறது. அவர்கள்தான் சம்பளம் மற்றும் பிடித்த பணத்தை கொடுக்காமல் இருந்து வருகின்றனர். அவர்களுடன் பேசி நிலுவையில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை கொடுக்க வேண்டும். விரைவில் நிலுவையில் உள்ள சம்பளத் தொகையும் பெற்றுத்தரப்படும்’ என்றார். அதன் பின்பு சமாதானம் அடைந்த தூய்மைப் பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Ottanchattaram ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்