×

10ம் வகுப்பு தேர்வில் செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் பள்ளி சாதனை

காரைக்குடி, மே 15: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி அஸ்மிதா 500க்கு 489 மார்க் பெற்றுள்ளார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 90, கணிதம் 99, அறிவியல் 97, சமூக அறிவியல் 98, தகவல் தொழில்நுட்பத்தில் 97 பெற்றுள்ளார். மாணவி பிராக்ரன்ஸ் 500க்கு 489 பெற்றுள்ளார். மாணவி சுபரஞ்ச்னி சுரேஷ்குமார் 500க்கு 477 பெற்றுள்ளார்.

ஆங்கிலத்தில் 18 பேர், அறிவியலில் 16, சமூக அறிவியலில் 21, தமிழ் 19, கணிதத்தில் 24, தகவல் தொழில் நுட்பத்தில் 22 பேர் 90 சதவீதத்துக்கு மேல் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிகுழும தலைவர் செல்லப்பன், தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்தியன், கல்விசார் இயக்குநர் முனைவர் ராஜேஸ்வரி மற்றும் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

The post 10ம் வகுப்பு தேர்வில் செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Tags : Chellappan Vidyamandir International School ,Karaikudi ,Chellappan Vidyamandir International CBSE School ,Asmita ,
× RELATED காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்