டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,ஜன.8: ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியூ) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தொழிலாளர் துறை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் முருகையா தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொது செயலாளர் பாண்டியன், பொருளாளர் ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர் பொன்.பாரதி, மாநில துணைசெயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதில்,டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேரத்தை வேலையை அமல்படுத்த வேண்டும். வார விடுமுறை, தேசிய பண்டிகை கால விடுமுறை வழங்க வேண்டும். மிகை நேரப்பணிக்கு ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: